×

நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 310 நாள் சிறை

பெரம்பூர்: புளியந்தோப்பு வ.உசி நகர் 12வது தெருவை சேர்ந்தவர் அபி (எ) அபிமன்யு (25), சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது புளியந்தோப்பு, கோட்டூர்புரம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் 10கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவர், கடந்த மார்ச் மாதம் புளியந்தோப்பு காவல் மாவட்ட துணை கமிஷனர் ஈஸ்வரனை நேரில் சந்தித்து, இனிமேல் எந்த குற்றச் செயலிலும் ஈடுபட மாட்டேன், என நன்னடத்தை பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்தார். ஆனால், அதை மீறி கடந்த ஏப்ரல் மாதம் 25ம் தேதி புளியந்தோப்பு தாசமகான் பகுதியில் நசீர் என்பவரை கத்தியால் வெட்டிவிட்டு தலைமறைவாகி விட்டார். திருப்பூர் மாவட்டத்தில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கடந்த மாதம் 15ம் தேதி கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர். நன்னடத்தை விதிமீறி குற்றச்செயலில் ஈடுபட்ட அபிமன்யு மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும்படி புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் ஜானகிராமன், துணை கமிஷனர் ஈஸ்வரனுக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில், பிரமாண பத்திரம் எழுதிக் கொடுத்துவிட்டு தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்த அபிமன்யுவை 310 நாட்கள் சிறையில் அடைக்க துணை கமிஷனர் நேற்று உத்தரவிட்டார்….

The post நன்னடத்தை விதிமீறிய ரவுடிக்கு 310 நாள் சிறை appeared first on Dinakaran.

Tags : Abhi (A) Abhimanyu ,12th Street, Usi Nagar, Pulianthopu ,
× RELATED தந்தை இறந்த சோகத்திலும் 10ம் வகுப்பில் சாதித்த மாணவி: குவியும் பாராட்டுகள்